Sliderஅரசியல்

முடியலை… மீசையில் மண் ஒட்டாத கதைதான்… அரசியல் விமர்சகர்கள் கிண்டல்

Rate this post

புதுடில்லி:
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சமாளிப்பார்கள் அல்லவா. அதுபோல்தான் உள்ளது ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருப்பது என்கின்றனர் அரசியல் விமசகர்கள்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பீஹார் மாநில லோக் ஜனசக்தி கட்சி தலைவர் .ராம்விலாஸ் பஸ்வான் கூறியது, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2019-ம்ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அடுத்த தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, மீண்டும் வெற்றி பெறும் என்றார்.

பாஜவிற்கு எதிரான அலை எழுந்துள்ள நிலையில் இப்படி ராம்விலாஸ் பஸ்வான் கூறிருப்பதை எதிர்கட்சியினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Comment here