விளையாட்டு

முதல் டி 20 போட்டி – இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Rate this post

இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்தது.

இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் 22 ரன்களில் வெளியேறினார். கேமரான் கிரீன் – ஸ்டீவன் ஸ்மித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

Comment here