Sliderஇந்தியா

முதல் முறையாக போர் விமானத்தை இயக்கினார் இந்திய பெண் பைலட்!

Rate this post
இதுகுறித்து இந்திய விமானப்படை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அவனி சதுர்வேதி என்ற இளம்பெண் கடந்த திங்கள்கிழமை, மிக்-21  போர் விமானத்தை தனியாக இயக்கினார். இதன் மூலம் இவ்வகை விமானத்தை இயக்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெறுகிறார். முன்னதாக, போர் விமானத்தை பெண்கள் இயக்குவதற்கான சோதனை செய்ய முடிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்கு முன்னரே, மாதம் சதுர்வேதி, பாவானா காந்த், மோகனா சிங் உள்ளிட்டோர் போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

2016-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் முதல் இவர்கள் போர் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அவனி சதுர்வேதி வெற்றிகரமாக போர் விமானத்தை இயக்கியதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக இவ்வகை விமான இயக்க பயிற்சிக்கு மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Comment here