ஜோசியம்

முன்னோர்கள் ஆசி கிடைக்கும் புரட்டாசி மாத ராசி பலன்கள் ;

5 (100%) 1 vote

சூரியபகவான் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும்.

பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 9 நாட்களும் கொலுவைத்து பூஜை செய்து அன்னையை வழிபடுகின்றனர். இந்த புரட்டாசி மாதத்தில் பருவ நிலையில் ஏற்படும் மாற்றங்களால் உடலுக்கு ஏற்றவாறு உணவு கொள்ள வேண்டும் என்பதற்காக பெரியோர்கள் விரைவில் செரிமானம் ஆகாத அசைவ உணவை தவிர்க்கவே விரதம் வைத்ததாக ஒரு கருத்தும் உள்ளது. முன்னோர்களின் ஆசி கிடைக்கும் புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம்.

கிரகங்களின் ராசி மாற்றம்
சூரியன் – ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் – 02ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்
புதன் – 17ம் தேதி கன்னி ராசிக்கு மாறுகிறார்
குரு – ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் – 02ம் தேதி துலாம் ராசிக்கும் 27ம் தேதிக்கு விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார்
சனி – ராசி மாற்றம் இல்லை
ராகு – ராசி மாற்றம் இல்லை
கேது – ராசி மாற்றம் இல்லை

மேஷம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளிடம் சச்சரவு வேண்டாம் அப்பாவுடன் பிரச்சினை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்திற்கு செல்கிறார் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்துக்கள் கிடைக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வீர்கள் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் தாய்மாமனுடன் சச்சரவு உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பணம் கடன் வாங்குவதை தவிர்க்கவும் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் சுக்கிரன் ஏழாமிடத்திற்கு செல்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் பெண்களால் நன்மை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் உல்லாசப் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியடையும்.
ரிஷபம்
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி உண்டாகும் வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்திற்கு செல்கிறார் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பலவிதமான தொல்லைகள் உண்டாகும் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தொழில் கல்வியில் சிறப்பு உண்டாகும் புத்திக்கூர்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆறாமிடத்திற்கு செல்கிறார் வாழ்க்கைத்துணையுடன் சச்சரவு உண்டாகும் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கூட்டுத் சிறப்படையும் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும் கால்நடைகள் சேர்க்கை அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும்.
மிதுனம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசு வாகன யோகம் உண்டாகும் அப்பாவின் சொத்து கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு செல்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும் நல்ல தகவல் கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடுகட்டி குடியேறுவீர்கள் புதிய வாகனம் வாங்குவீர்கள் சுக்கிரன் ஐந்தாமிடத்திற்கு செல்கிறார் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் அசதி அதிகரிக்கும் பரம்பரை சொத்தில் பிரச்சினை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பணியாளர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் உண்டாகும்.

கடகம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் உண்டாகும் தொழிலுக்காக வெளியூர் செல்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திற்கு செல்கிறார் வீடு மனை போன்ற விஷயங்களில் தொல்லை உண்டாகும் உடன் பிறப்புகளுடன் பிரச்சினை உண்டாகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்கும் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் நல்லுறவு உண்டாகும் இடமாற்றம் உண்டாகும் சுக்கிரன் நான்காமிடத்திற்கு செல்கிறார் வீட்டை பராமரிப்பு செய்து அழகுபடுத்திவீர்கள் வாகன யோகம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கேளிக்கை விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் பரம்பரை சொத்து கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் உண்டாகும் குழப்பத்தை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் சொந்த தொழிலில் பணவரவு அதிகரிக்கும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்திற்கு செல்கிறார் வாகன யோகம் உண்டாகும் குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்துவீர்கள் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தி கூர்மை அதிகரிக்கும் வாக்கு வன்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்திற்கு செல்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும் சுப மங்கல விழாக்களில் கலந்து கொள்வீர்கள் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் விவசாயம் விருத்தியடையும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த பண வரவு வந்து சேரும் செவ்வாய் நான்காமிடத்திற்கு செல்கிறார் புதிதாக வீடு மனை நிலம் வாங்குவீர்கள் தொழில் உத்தியோகம் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அயல் நாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் புத்திக் கூர்மை அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும் சுக்கிரன் இரண்டாமிடத்திற்கு செல்கிறார் ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும் முக வசீகரம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் இட மாற்றம் உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் யாருடனும் சச்சரவு வேண்டாம்.

துலாம்
சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பா வகையில் செலவுகள் அதிகரிக்கும் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் செய்வீர்கள் செவ்வாய் மூன்றாமிடத்திற்கு செல்கிறார் சகோதரர்கள் வகையில் பணவரவு கிடைக்கும் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் நிலை உண்டாகும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும் பொன்னகைகள் வாங்குவதன் காரணமாகவும் செலவுகள் உண்டாகும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் முக வசீகரம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் அசையா சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

விருச்சிகம்
சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் அப்பாவினால் நன்மை உண்டாகும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் இரண்டாமிடத்திற்கு செல்கிறார் சொந்த தொழிலில் பண வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் கமிஷன் வியாபாரம் மேன்மையடையும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் நினைப்பதெல்லாம் நிறைவேறும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்திற்கு செல்கிறார் வாழ்க்கைத் துணையால் செலவுகள் அதிகரிக்கும் தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகள் உண்டாகும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இட மாற்றம் உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

தனுசு
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மிகவும் சிறப்படையும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் கோபத்தை கட்டுப் படுத்திக் கொள்ளவும் அதிகார பதவி கிடைக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும் அதிகமான பண வரவு உண்டாகும் சுக்கிரன் பதினொன்றாமிடத்திற்கு செல்கிறார் பெண்களால் லாபம் அதிகரிக்கும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் உண்டாகும் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் அப்பாவின் உதவி கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும்.

மகரம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் சிவாலய தரிசனம் நன்மையைத் தரும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்திற்கு செல்கிறார் நிலம் வீடு மனை வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் சகோதரர்களுக்காக அதிகமாக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமன் விஷயத்தில் கவனம் தேவை உயர்கல்வி நிலை சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும் சுக்கிரன் பத்தாமிடத்திற்கு வருகிறார் ஜவுளி வியாபாரம் சிறப்படையும் அழகு சாதனம் தொடர்பான தொழில் விருத்தியடையும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் சச்சரவு செய்ய வேண்டாம் கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

கும்பம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசு நிறுவனங்களிலிருந்து நீண்ட நாட்களாக நிலுவையிலுருந்த பணம் வந்து சேரும் அப்பாவிடம் சச்சரவைத் தவிர்க்கவும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வீடுகட்டுவதற்கு நீண்ட நாட்களாக இருந்த தடை நீங்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழில் மேன்மையடையும் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் அதிர்ஷ்டம் உண்டாமும் எதிர்பாராமல் பணம் கிடைக்கும் சுக்கிரன் ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் கடவுள் அருள் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எடுக்கும் முயற்சிகளெல்லாம் வெற்றியடையும் செய் தொழில் மேன்மையடையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செய்யும் நிலை உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய்மாமனுடன் வீண்தகராறை தவிர்க்கவும் கமிஷன் தொழில் சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் சுக்கிரன் எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை வீணான மனக் கஷ்டம் உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்து வகையில் செலவுகள் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தான தர்மங்கள் செய்வீர்கள்.

Comment here