இந்தியா

மும்பையில் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருகியது

மராட்டிய மாநிலத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மும்பை நகரில் இன்று காலையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் புரண்டு ஓடத்தொடங்கியது. போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகளில் வாகனங்கள் நகரமுடியாமல் வரிசையாக நின்றன.

முக்கியமான சப்-வேகளிலும் நிலை மோசமானது. மாலை வரையில் போக்குவரத்தில் பாதிப்பு நேரிட்டுள்ளது. இதனால் சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே மழைகாரணமாக நேரிட்ட விபத்து சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். 29-ம் தேதி வரையில் மழையிருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Comment here