அரசியல்

முரசொலி விமர்சனத்திற்கு பிறகு, ஒரே மேடையில் அருகருகே அமர்ந்த ஸ்டாலின் – கமல்

Rate this post

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் கமல்ஹாசன் காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை திருவான்மியூரில் தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் ஸ்டாலின், கமலஹாசன், பொன் .ராதாகிருஷ்ணன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முரசொலி நாளேட்டில் வந்த கட்டுரையில் கமலஹாசனை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், ஸ்டாலினும் கமலஹாசனும் திருமண நிகழ்ச்சியில் மேடையில் அருகருகே அமர்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மேடையில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், மக்களை ஏமாற்றுவதற்கே பிரதமர் மோடி தமிழியில் பேசி வருவதாகவும், மோடி தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து பாடாமல், தமிழக நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பது வருத்தத்தை அளிப்பதாக கூறினார்.

Comment here