மூட்டுவலி குணமாக முடக்கத்தான் கீரை

Rate this post

கீரை வகைகளில் முடக்கத்தான் கீரை 40 வயது கடந்தவர்களுக்கான மூட்டு வலி குணமாக முக்கிய பங்கை செய்து வருகிறது.

முடக்கத்தான் கீரையுடன் இஞ்சி சிறய துண்டு, பூண்டு நான்கு பல், சின்ன வெங்காயம் ஒன்று, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு அரைத்தேக்கரண்டி இவைகளை கொஞ்சம் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.பிறகு அதில் இரண்டு குவளை நீர் ஊற்றி முடக்கத்தான் கீரை நன்றாக வேக வைக்கவேண்டும். கீரை நன்றாக வெந்து, அதன் சாரம் இறங்கிய பிறகு, வடிகட்டி எடுத்தால் முடக்கத்தான் கீரையின் சாறு தயாராகிவிடும். இதனை, மூட்டுகளில் தங்கிய எல்லா வலிகளும் கரைந்து வலி இல்லாமல் போகும். குறிப்பாக, முடக்கத்தான் கீரையை 40 வயது கடந்தவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது. முதுகு தண்டுவடம் தேய்மானம் இருப்பவர்கள், மாதவிலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எல்லாவிதமான மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் இந்த கீரை குணப்படுத்தும். அத்துடன், விளக்கெண்ணெயில் முடக்கத்தான் கீரையை வதக்கி உண்டால் கைகால் வலி, மூட்டுவலி, முதுகு வலி, உடல் வலிகள் குணமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*