பொது

மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு

மூன்று கண்களை உடைய அதிசய பாம்பு ஒன்று, ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், ஆர்ன்ஹெம் நெடுஞ்சாலையில், வனவிலங்கு பூங்கா பராமரிப்பாளர்கள், கடந்த மார்ச் மாதம் வினோத பாம்பு ஒன்றை கண்டு ஆச்சரியப்பட்டனர். காரணம், அதற்கு 3 கண்கள் இருந்தது தான்.

 

நெடுஞ்சாலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு, கார்பெட் மலைப்பாம்பு வகையை சேர்ந்தது; ஆண் பாம்பு ஆகும். அதன் மூன்றாவது கண், மற்ற இரண்டு கண்களை போலவே இயல்பாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, இந்த பாம்பு சீக்கிரம் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comment here