ஆயுர்வேதம்

மூலநோய்க்கு சிறந்த மருந்து சுண்டைக்காய்

சுண்டைக்காய்

சுண்டைக்கையில் இரண்டு வகைகள் உள்ளன. காட்டு சுண்டைக்காய், நாட்டு சுண்டைக்காய் என உள்ளது. காடுகளில் தானாக வளர்ந்து அதிகமாக காணப்மலை சுண்டைக்காய், கட்டுசுண்டைகை என கூறப்படுகிறது. வீடு தோட்டங்களிலும், கொல்லைபுரங்களிலும் வளர்க்கபடுவது நாட்டு    சுண்டைக்காய் அளவில் சிறியதான ஒரு காய். அனால் அதில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளமானவை. சுண்டைகாயில் உள்ள மருத்துவகுணங்கக் அப்படி ,  சுண்டைக்கையில் இரும்புசத்துக்கள்,புரதம்,கால்சியம்  போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.நாட்டு சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்ணலாம். காட்டு சுண்டைக்காயை காயவைத்து வற்றலாக  சமைத்து சாப்பிடலாம்.  லேசான கசப்பு சுவை கொண்ட சுண்டைகையை வாரத்தில் இரண்டு நாள் அவசியம் உணவில் சேர்த்து கொள்ளளலாம்.இதனால் இரதம் சுத்தமடையும்,உடல் சோர்வு நீங்கும், சுவாசம் சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர் அடிக்கடிசுண்டைகை சேர்த்துக் கொண்டால் வயிற்று கிருமி , மூல கிருமி,, போன்றவை அகலும் , வயிற்ருபுன் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் வலுவடையும். சுண்டைக்காய் செடி முழுவதுமே பலன் தரக்கூடியது.சுண்டைக்காய் செடியின் இலைகள், காய், வேர், என முழு தாவரமும் மருத்துவ குணமுடையது. இலைகள் இரத்த கசிவை தடுக்ககூடியது.சுண்டைக்காய் கல்லீரல் மற்றும் கனையத்தை காக்கக் கூடியது. முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து  எடுத்து தினமும் எண்ணையில் வறுத்து சாப்பிடலாம். வற்றல் குழம்பு வைத்து சாப்பிடலாம், இது போல் சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள கசடுகளை நீக்கும். மார்பு சளியை போக்கும்,.நீரழிவுநோய் நோய்க்கு சிறந்த மருந்தாகும். நீரழிவுநோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்ருபோருமல் ஆகியவை நீங்கும். சுண்டைக்காய் சூப் செய்து சாப்பிட் டால், மூலச்சுடு , மூலக்கடுப்பு  மூலத்தில் ரத்தம் வெளியேறுதல், போன்ற நோய்கள் குணமாகும். எங்கும் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பதார்த்த வகையான சுண்டைகையை அதமாக உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுவோம் சுண்டைகையை பற்றிய ஒரு பழமொழியும் உண்டு “சுண்டைக்காய் கால் பணம்  சுமைக்கூலி முக்கால்  பணம் “ சுலபமாக  கிடைக்ககூடிய சுண்டைக்காயை எடுத்துவர அதிகம் செலவாகும்  என்பதாகும்.

Comment here