தமிழகம்பிரத்யகம்

மூளைச்சாவு: இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததையடுத்து இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

 சென்னை கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் அர்ஜூன்(27). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு ராஜலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார்.

 ஜூன் 19-ஆம் தேதி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அர்ஜூன் மீது கார் மோதியதில் விபத்துக்குள்ளானார். இதனையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அங்குசிகிச்ச பயனனிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது மனைவி சம்மதம் தெரிவித்தார்.

 கல்லீரல், சிறுநீரகம், இருதய வால்வுகள், கண்கள் ஆகிய ஆறு உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

 ஒரு சிறுநீரகம் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகரம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. கண்கள் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

 கல்லீரல், இருதய வால்வு ஆகிய உறுப்புகள் தனியார் மருத்துவமனைக்கு தானமளிக்கப்பட்டன.

Comment here