மருத்துவம்

மெண்களின் நீர்க்கட்டிகளை விரட்டி வாரிசுகளை உண்டாக்கும் உணவுகள்

குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்’ என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ‘கருத்தரிப்பு மையங்கள்’ பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், ‘கடவுளே சொல்லிட்டார்’ என்பதுபோல, ‘டாக்டர் சொல்லிட்டார்’ என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன.

”குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு… பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில் 80 சதவிகிதத்தினருக்கும் மேல், பைசா செலவில்லாமலேயே… குழந்தைப்பேறு அடைய முடியும்” என்பதுதான் நம்முடைய மண்ணின் மருத்துவர்களான சித்த மருத்துவர்கள் சொல்லும் தீர்வாக இருக்கிறது!

உணவும், வாழ்க்கை முறையுமே மருந்து!

இங்கே அதைப் பற்றி பேசுகிறார்… சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர், கு.சிவராமன். ”பெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத ‘ஜங் ஃபுட்’ உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது… இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்… நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே… இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 20 – 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பை யும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்னை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

மன அழுத்தத்தை விரட்டுங்கள்!

அடுத்த பிரச்னை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ… பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

சினைப்பை முட்டை வளர்ச்சி குறைவாக இருப்பது,

கருமுட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தை யின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகத்துவம் தரும் மாதுளை… பப்பாளி!

பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும், வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக்குறிப்புகளைப் பின்பற்றலாம். உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களை சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களோ, பெண்களோ… பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகலாம். சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது… ஆண்களுக்கு ஆபத்தா?

‘ஆண்கள் உடற்பயிற்சி செய்வதால் விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்பிருக்கிறது’ என்றொரு தகவல் உண்டு. இது தவறான தகவல். ஆனால், உடற்பயிற்சிக்குத் தகுந்த, சத்தான உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி மையங்களில் தரப்படும் புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை விந்தணு குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்” என்ற டாக்டர் சிவ ராமன்,

”உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நெருப்புக்கு அருகில் வேலை செய்பவர்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக் கிறது” என்று எச்சரிக்கையும் தந்தார்.
மூலிகை வைத்தியத்தில் தீர்வு!

”விந்தணு குறைபாடு, கர்ப்பப்பை அடைப்பு மற்றும் சினை முட்டை உற்பத்தியின்மை போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். இவற்றை மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிதாக நிவர்த்தி செய்யமுடியும்” என்கிறார் பழநிமலையை அடுத்துள்ள கொழுமம் கிராம மூலிகை ஆராய்ச்சியாளர் பிறைசூடிப்பித்தன்.
”ரசாயன இடுபொருள் பயன்பாட்டில் விளைந்த உணவுப் பொருட்கள், மது, புகை, மன உளைச்சல், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுதல், உடல் பருமன் நோய் போன்ற பற்பல காரணங்களினால்… ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி ஆண்,

பெண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை எளிமையாகக் குணப்படுத்தி, பிறருடைய விந்தணு மற்றும் கருமுட்டை என தேடிக்கொண்டிருக்காமல், அந்தந்த ஜோடியினரே ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள மூலிகை வைத்தியத்தில் அநேக வழிகள் உள்ளன. இதற்கு பொறுமை யும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.
சோற்றுக்கற்றாழை, மூசாம்பர மெழுகு, பெருங்காயம்,

வெல்லம் உள்ளிட்ட பலவற் றைப் பயன்படுத்தி பெண்ணின் சினைமுட்டை உற்பத்தியைப் பெருக்கவும் வழிஉண்டு. பப்பாளி, அன்னாசிப்பழம் இரண்டையும் குறைபாடு உள்ள பெண்கள் சாப்பிட்டு வந்தால்… முறையான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். முறையான மூலிகை வைத்தியம் செய் தால்… கர்ப்பப்பை குறைபாடுகள், அடைப்பு, கட்டிகள் போன்றவற்றை கத்தியின்றி சரிசெய்யலாம்” என்கிறார் பிறைசூடிப்பித்தன்.

குழந்தையின்மையைத் தவிர்க்க… கணவன்- மனைவி இருவரும் உடல் மற்றும் மனரீதியில் எடுக்க வேண்டிய முயற்சிகள், குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான மனநல ஆலோசனைகள்

Comment here