ஆன்மிகம்

மெய்பொருள் நாயனார் திருவடி பணிந்து

மெய்ப்பொருள் நாயனார். திருகோவலூரில் அவதரித்த சிவபக்தர் மெய்ப்பொருள் நாயனார் பெருமான். குறுநிலமன்னன் நாட்டை ஆள்வதுடன் சிவபணியும், மக்களுக்கு யாதொரு குறையும் வாராது காத்தும், எந்நாட்டின் மீது போர் புரினும் தோல்வி காணாது வெற்றியும் பெற்று,ஈசன் அருளால் பார்போற்ற வாழ்ந்த மன்னர் பெருமான் மெய்பொருள் நாயனார்.நீறுபூசிய அடியார்களே மெய்ப்பொருள். அவர்கள் அனைவரும் வணங்கதக்க போற்றதக்க மெய்ப்பொருள் என தம் நெஞ்சத்துள் நித்தம் நினைத்து அந்த நினைவுடனே வாழ்ந்த மெய்யடியார் மெய்பொருள் நாயனார்.எந்த போரிலும் தோல்வியே காணாத அடியார்.அவரிடம் போரில் தோல்வியுற்று அவமானம் கொண்ட மன்னன் ஒருவன் அடியாரை பழிவாங்க திட்டமிட்டுகிறான்.அதற்க்காக அந்த ஈனன் ஒரு புத்தகத்தின் உள்ளே குறுவாளை மறைத்து வைத்துகொண்டு உடல்முழுதும் நீறுபூசி சிறந்த சிவனடியார் போன்று பொய்வேடம் தரித்து மெய்ப்பொருள் நாயனார் அரண்மனைக்கு செல்கிறான்.அங்கே அத்துனை வாயிலிலும் தன் பொய்பேச்சை பகன்று மன்னரின் பள்ளியறைவரை சென்றுவிடுகிறான்.அங்கே காவல் நின்றிருந்த காவலனிடமும் தன் பசப்பு வார்த்தை கூறி பள்ளியறை உள்ளே நுழைகிறான் அந்த மூடன்.அரசியரை மன்னருடன் தாம் தனியே உபதேசம் செய்விக்க இருப்பதால் அரசி அங்கிருந்து அகலசெய்கிறான். அதன்பின்னர் மன்னரை தம்முன்னே அமரவித்து தம் புத்தகத்தை எடுப்பதுபோல் பாவனை செய்து அதனுள் மறைத்து வைத்திருந்த குறுவாளால் மன்னரின் நெஞ்சுக்குள் பாய்ச்சுகிறான். அதை அறிந்த மன்னரின் மெய்காவலன் அந்த மூடனின் உயிரை பறிக்க தன் வாளை ஓங்க, மன்னர் வேண்டாமென தடுத்துவிடுகிறார். உடல் முழுதும் நீறுபூசிய அடியார் கோலம்கொண்ட அவர் மெய்ப்பொருளாவார்.அவருக்கு யாதொரு தீங்ரும் நேராவண்ணம் அவரை பாதுகாத்து அவரது நாடுசெல்ல வழிவகை செய்தருளவேண்டும் என பணிக்கிறார். காவலரும் அவ்வண்ணமே செய்தருள்கிறார். அதைகேட்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு தாம்பெரும்பேறு பெற்றதாக அகமகிழ்கிறார்.தம் இன்னுயிர் ஈசன் திருவடி உய்ய ஈசன் நடத்திய திருவிளையாடலே என்று மகிழ்ந்து பேரின்பம் கொள்கிறார்.அவரது அன்பில் பூரிப்படைந்த ஈசனும் விடைமீது அம்மையுடன் வந்து காட்சி தந்தருளி திருகயிலையில் தம் திருவடிகீழ் நீங்காது தங்கி இளைப்பாற அருள்புரிந்து 63 நாயன்மார்களில் ஒருவராக அருள்புரிகிறார். மெய்பொருள் நாயனார் திருவடி பணிந்து ஈசனின் பொற்பாதகமலங்களையும் வணங்கி பேரருள் பெறுவோமாக. நன்றி. ஓம் நமசிவாய.

Comment here