Sliderஉலகம்

மேலைக் கங்கர் அரச மரபு History of Western Ganga Dynasty

Rate this postபழங்கால கர்நாடகத்தில் இருந்த ஓர் சிறப்பு வாய்ந்த அரசமரபாகும் இந்த கங்க அரச மரபு கங்கை குலத்தவர்களின் முன்னோன் சங்ககாலக் கங்கன். களப்பிரர் காலத்தில், சங்ககால சேரர் வலுக்குன்றியிருந்த வேளையில், சேரரின் இடத்தை நிரப்பியவர் மேலை கங்கர்களின் கிளையினரான அதிராஜ இந்திரன் எனும் இந்திரவர்மன், இது கிபி 350 – கிபி 1100 வரை ஆட்சியில் இருந்தது, மேலைக் கங்கர்களின் முதல் அரசன் கொங்கனிவர்மன், தாங்கள் இஷ்வாகுவின் பரம்பரையில் (சூரிய வம்சத்தில்), கண்ணுவ கோத்திரத்தில் பிறந்தவன் என்று மாதவவர்மன் தன் செப்பேடுகளில் குறித்துள்ளான்.
பல்லவ பேரரசு வலு குன்றிய நேரத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்கள் விடுதலை வேண்டி புரட்சி செய்தனர், அக்கால கட்டத்தில் இவர்கள் தோன்றியதாக கருதப்படுகிறது. கிபி 350லிருந்து 550 வரை இவர்கள் யாருக்கும் கட்டுப்படாமல் இருந்தார்கள்,
கி.பி 482- கி.பி 517 ஆம் ஆண்டில் வடகொங்கு நாட்டின் வடமேற்கில் உள்ள புன்னாட்டு கடைசி அரசன் வாரிசான அவன் மகளை கங்க அரசன் அவனிதன் தன் மகன் துர்வினிதனுக்கு மணம் புரிந்து வடகொங்கு நாடான புன்னாட்டை கங்க நாட்டுடன் இணைத்துக் கொண்டான் இவ்வாறு உறவு முறைகள் மூலமும் கங்க நாடு விரிவடைந்தது..

” நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி
துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி
பொன்னணி வல்வில் புன்றுறை
என்றாங்கு “. – (அகம் 44: 7-9)

கங்க வம்சத்து சிவமாறன் என்ற இளவரசன் கொங்கல் நாடு 8,000 என்ற பகுதியின் சிற்றரசனாக முடிசூட்டிக் கொண்டு கி.பி 755 முதல் கி.பி 765 வரை ஆட்சிசெய்தான், இவனை கங்க வம்சத்து சிறந்த அரசன் என்றும் இவனை கொங்கணி மகாராஜன் என பிருதுகள் சாசனம் விவரிக்கிறது. வாதாபியின் மேலைச்சாளுக்கியர்கள் ஆட்சிப் பகுதியை ஆட்சி செய்ததால் மேலைக் கங்கர்கள் ஆயினர், காங்கேயனின் பரம்பரையில் இருந்து வந்த கோலாஹலன் கங்கபாடியில் கோலார், கொள்ளேகாலம் பகுதிகளில் அப்பொழுது ஆதிக்கத்தில் இருந்த பாண அரசர்களை எதிர்த்து ஒடுக்கி, தலைக்காடு, மைசூர் பகுதிகளை அதன்பின்னர்தான் கையகப்படுத்தினார்கள் என்பதும், 11ஆம் நூற்றாண்டு வரை இப்படி சேர்த்த தேசங்களே கங்கவாடி 96000 என்பது கலிங்கத்தை ஆண்ட கங்கர்களே இன்றைய கங்கபாடியின் கோலார் மாவட்டத்தின் குவலாளபுரத்தில் மேற்கு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தனர்,  விழியநகரத்தில் கீழைக் கங்கர்களின் கல்வெட்டு ஒன்று காங்கேயன் என்ற தலைவரின் கால்வழியில் வந்த 18 தலைமுறையினரை (சிதம்பரன் உட்பட) குறிக்கின்றது. இதில் 17ஆவது தலைக்கட்டான கோலாஹலன் என்பவன் பெரிய கங்கபாடி விசையத்தில் கோலாஹலம் என்ற நகரை எழுப்பினான் என்றும், இந்த கோலாஹலனுக்குப்பின் 80 தலைக்கட்டுகள் அந்த கோலாஹல நகரில் அரசாண்டது என்று தெரிவிக்கின்றது. அப்படி 80ஆவது தலைமுறையினன் வீரசிம்மன் ஆவான் .   
  காங்கேயன் பரம்பரையில் 18+80 = 96 தலைமுறைகளுக்கு பின் பிறந்த இந்த வீரசிம்மனின் 5 புதல்வர்களில் மூத்தவனான காமர்ணவனே தன் முடியை, கங்கபாடியை அரசாலும் தகுதியை, தன் தாய்மாமனுக்கு கொடுத்துவிட்டு , தன் 4 இளைய சகோதரர்களுடன் மகேந்திரமலைக்கு சென்று கோகர்ண சுவாமியை வழிபட்டு, காளையை/நந்தியை லட்சினையாகவும், சின்னமாகவும், தன்னாட்சி அதிகாரம் பொருந்திய பேரரசை நிறுவ அதற்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டு, கலிங்கத்துக்கு சென்று , பாலாதித்தனை வென்று, தனக்கு கீழ்ப்படிய செய்து, மூன்று கலிங்க நாடுகளையும் வீழ்த்தி, புதிதாக ஒரு கங்கர் பரம்பரையை தோற்றுவித்தான் என்றும், ஜந்தவுரம் என்ற ஊரை (இன்றைய முக்கலிங்கம்) தலைநகராக கொண்டு மூன்று கலிங்கநாடுகளையும் தன் நான்கு தம்பிகளுள் மூவரை மூன்று நாடுகளுக்கும் ஆளுநராகவும், எஞ்சிய ஒருவனான தனர்ணவனை தனக்குப்பின் பட்டத்துக்குரிய ராஜ வாரிசாகவும் தேர்ந்தெடுத்தான் என்றும், இந்த இருவருக்கும் பிறகு 15 தலைமுறை கழித்து பிறந்தவனே வாண அரசர்களின் கிளையான வைதும்பராயர்கள் குலத்து இளவரசி, விண்ணவன் மகாதேவியை மணந்த ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் என்றும் அதே கல்வெட்டு குறிப்பிடுகின்றது. 
 கி.பி 1038 ஆம் ஆண்டில் மேலை கங்கர் கிளையினரான கலிங்கத்தையாலும் குறுநில மன்னன் ஐந்தாம் வஜ்ரஹஸ்தன் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களையே வீழ்த்தி, சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களின் பிரம்மமகேஷ்வரர், மகாராஜாதிராஜன் போன்ற பட்டங்களை சூடிக்கொள்வதுடன், கலிங்க நாடு, ஒட்டிய நாடு என மூன்று நாடுகளாக சிதறியிருந்த கலிங்கதேசத்தை முழுதாக ஆள்வதால் சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கே உரியதான திரிக்கலிங்காதிபதி என்ற பட்டத்தை பெருமையுடன் சூட்டிக்கொள்கிறார். இவர் கலிங்கத்தை முழுதாக கைவச்சப்படுத்தியிருந்தாலும், எதிரிகள் கலிங்கத்தை பலவாறு பிடிக்க முயன்றனர். அதனால் இவரின் மகன் ராஜராஜ கங்கேயன் என்கிற ராஜராஜதேவ கங்கன் முதலாம் ராஜேந்திர சோழனின் மகளான ராஜசுந்தரி என்கிற சோழ இளவரசியை மணந்து கொண்டான், ஆனால் ராஜராஜ கங்கேயன் இளம் வயதிலேயே இறந்து விட, அரச வாரிசான அனந்தவர்மன் சோடகங்கன் 5 வயதில் தன் விதவைத்தாயான சோழ இளவரசி அவளது தமையனான வீரராஜேந்திர சோழனை தன் எதிரியான சாளுக்கியரை வீழ்த்தும்படி அழைப்புவிடுக்கும்வரை நீடித்தது. இதன்பின் வீரராஜேந்திர சோழனின்மகனான அதிராஜராஜன் கொல்லப்பட, கீழை சாளுக்கிய விஜயாதித்தன் குலோத்துங்கனாக முடிசூட்டிக்கொண்டதும், கலிங்கத்தின் மீது போர் தொடுத்து, அனந்தவர்மனை தன் முன்னோருக்காக பழிவாங்கினான். இதன் பின் அனந்தவர்மன் சோழ கங்கன் தன் தலைநகரை கி.பி 1135 இல் கலிங்கநகருக்கு(இன்றைய கட்டாக்) நகருக்கு மாற்றி, தாங்கள் மேலைக்கங்கர்கள் என்று இருந்த அடையாளத்தை துறந்து புதியதொரு சாம்ராஜ்யம் படைத்தார். இதன் பின் சோழர்களால் மேலைக் கங்கர்கள் தோற்கடிக்கப்பட்டவுடன் கங்கர்களின் 1000 ஆண்டு செல்வாக்கு அப்பகுதியில் முடிவுக்கு வந்தது.

Comment here