Sliderஇந்தியா

மொழியும் இறைவனும்

கடந்த_ஒரு_வாரத்தில்_மட்டுமே

மிகவும் பழைமை வாய்ந்த,
கோடிக்கணக்கான மதிப்புகொண்ட
300 க்கும் மேற்பட்ட சிலைகளை
சிலை கடத்தல் பிரிவு கண்டுபிடித்திருக்கிறது…

போயஸ் கார்டன் தொடங்கி
பல்வேறு பண்ணை வீடுகளில்
புதைத்து வைக்கப்பட்ட சிலைகளை
இன்னும் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்,

தினமும் செய்தி சேனல்களிலும்
செய்தித்தாள்களிலும்,
சமூக வலைதளங்களிலும்
வந்துகொண்டே இருக்கிறது,

ஒரு நாட்டின், இனத்தின் வரலாறுகளையும்,
அதன் தொன்மையையும், கலாச்சார
பண்பாடுகளையும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றுவரை
உலகம் முழுவதும் அதற்கு நம்பி இருப்பது
பழங்கால கல்வெட்டுக்களையும்,
சிற்பங்களையும், சிலைகளையும்,
வழிபாட்டு தலங்களையும் தான்,

அந்த வகையில் நம்முடைய
இனத்தின், மொழியின் பொக்கிஷங்களாக
கருதப்படும் ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்கள், சிலைகள், சிற்பங்கள் பல வருடங்களாக
கடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான கோடிகளை
கடத்தியவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்த அரசும், அந்த அரசால் உருவாக்கப்பட்ட
அறநிலையத்துறையும் சம்பாதித்து
இருக்கிறார்கள்,

தற்போது தொடர்ந்து கடத்தப்பட்ட சிலைகள்
கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது,

தமிழ் இனத்தின் பொக்கிஷங்களாக
இந்த சிலைகளும் சிற்பங்களும்
இருக்கும்போது,

தமிழ் எங்கள் உயிர்,
தமிழ் எங்கள் மூச்சு,
தமிழுக்காகவே வாழ்கிறோம் என்று
மேடைக்கு மேடை பேசிக்கொண்டிருக்கும்

திரு. ஸ்டாலின், வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, சுப.வீரபண்டியன், பாரதிராஜா, சத்யராஜ், அமீர், கவுதமன், டாஸ்மாக் புரட்சி நந்தினி, முகநூல் தமிழ் புரட்சியாளர்கள், இவர்கள் எல்லாம் ஏன் வாய்திறக்கவே இல்லை!

தமிழகத்தின் பொக்கிஷங்கள் இந்த சிற்பங்கள் எனும்போது அந்த அடையாளங்கள் கடத்தப்பட்டு இருப்பதை பார்க்கும்போது உணர்ச்சி பொங்கவில்லை,

அவை கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பதாலா ?

S.v. சேகர், H. ராஜா, தமிழிசை போன்ற
சாதாரண மனிதர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கருத்து தெரிவிக்கிறார்கள்,

இவ்வளவு பெரிய
அடையாள அழிப்புக்கு ஏன் பொங்கவில்லை
இதுதான் இவர்கள் தமிழினத்தை
காப்பாற்றுகின்ற லட்சணமா?

இவர்கள் எவ்வளவு பெரிய உத்தமர்கள்
என்பதை இதை வைத்தே
தெரிந்துகொள்ளலாம்…..

தமிழ் தமிழ் என்று வாய்கிழிய பேசுவது
100 சதவீத சுத்த பொய்!
பார்ப்பனர்களை அழிக்கிறேன் என்கின்ற
பெயரில் இவர்கள் தமிழையும்
அதன் அடையாளங்களையும் அழித்துக்கொண்டிருக்கிற இனதுரோகிகள்!

பக்தி இலக்கியங்களும், புராண இதிகாசங்களும்
இல்லாமல் இத்தனை ஆயிரம் ஆண்டுகாலங்கள் தமிழும் அதன் இனமும் எப்படி வாழ்ந்து வளர்ந்தது, முந்தாநாள் முளைத்த பெரியார் மண் இதுவென்றால்,

அதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான வருடங்களாக
இருந்த மண் யாருடையது,

ஈவேரா வோட தாத்தா மண்ணா ?

தமிழின், தமிழ் இனத்தின்,
இந்து சமயத்தின் ஒட்டுமொத்த எதிரி
யார் என்றால் திராவிட பாரம்பரியத்தில்
வந்த அனைத்து கட்சிகளும், தற்போது
தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும்
புது புரட்சியாள காளாண்களும்தான்!

பிற மதத்தினரினரோடு சேர்ந்துகொண்டு
இந்து என்கின்ற அடையாளத்தை
அழிப்பதாக சொல்லி தமிழையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இந்துமதத்திற்கு எதிரான அத்தனை
சதிவேலைகளையும் செய்துகொண்டிருப்பது
பிறமதத்தினரின் இயக்கங்கங்கள் தான்,

அதற்கு துணையாக இருந்து நம் முதுகில்
குத்திக்கொண்டிருப்பது திராவிடமும்
தமிழ்தேசியமும் பேசும் புரட்சியாளர்கள் தான்!

வருகின்ற தேர்தலில் இவர்களை
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்,
மத நம்பிக்கைகளையோ, கடவுள்களையோ
இழிவாகவோ கேலியாகவோ பேசிவிட்டு
ஓட்டுக்காக மட்டும் பிச்சை கேட்டு
வீட்டுக்கு வந்தால்
எப்படி அடித்து விரட்டவேண்டும் என்று
உங்களுக்கே தெரியும்…

மொழியும், மதமும், இறைவனும்
ஒருபோதும் தவறானவற்றை கற்றுக்கொடுத்ததில்லை!
அதுதான் நமது அடையாளமும்!
அதை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள்!!.

—#அஷோக்குமார்

Comment here