மோடிஅரசு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆம் ஆத்மி கடும் விமர்சனம்

Rate this post

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை எவ்வாறு செயல்படவிடாமல் செய்து, அதில் குழப்பத்தைஏற்படுத்திச் சிக்கல் உண்டாக்கியதற்குச் சிறந்த உதாரணம் டெல்லி அரசுதான்.

நாட்டின் அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் மோடி அரசு மிகப்பெரியஅச்சுறுத்தல் என்று ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசை யாராலும் அழிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர்அருண் ஜேட்லி, டெல்லியில் நடந்த வாஜ்பாய் நினைவு சொற்பொழிவில் பேசி இருந்தார். இதற்குப் பதிலடிகொடுத்து ஆம் ஆத்மி கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது
ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை மோடி அரசு நாட்டின் ஜனநாயகத்துக்கும்,நாட்டின் அரசியமைப்புவழங்கியுள்ள கூட்டாட்சி அமைப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். பாஜகவின் பொய்களால்நீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது.
தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மகத்துவத்தைப் பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கும், அதன்அமைச்சர்களுக்கும் எந்தவிதமான உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை. பாஜகவின் இந்த 5 ஆண்டுகள்ஆட்சியில் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை எவ்வாறு நடத்தினார்கள், அரசியலைப்புச்சட்டவிதிமுறைகளை எப்படி கேலிக்கூத்தாக்கினார்கள் என்பது தெரியும், இவர்களின் 5ஆண்டுகள் ஆட்சியும்வெட்கப்படக்கூடிய அளவுக்கு இருக்கிறது.
மோடி அரசு, இரு மாநில அரசுகளைக் கலைக்க முற்பட்டு, அதைத் தோல்வியில் முடிந்தது. நாட்டில் பாஜகஇல்லாத அரசும் எந்த மாநிலத்திலாவது இருந்தால், அந்த அரசின் கழுத்தை நெறித்து, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளாமல் மோடி அரசு இருந்ததுண்டா.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை எவ்வாறு செயல்படவிடாமல் செய்து, அதில் குழப்பத்தைஏற்படுத்திச் சிக்கல் உண்டாக்கியதற்குச் சிறந்த உதாரணம் டெல்லி அரசுதான்.
இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*