ம‌க்க‌ள் கடு‌ம் வேதனை‌ -அ‌ரி‌சி, பரு‌ப்பு, சமைய‌ல் எ‌ண்ணெ‌ய்க‌ள்.

5 (100%) 1 vote

ம‌க்க‌ளி‌ன் அ‌த்‌தி‌யாவ‌சிய பொரு‌ட்களான அ‌ரி‌சி, அனை‌த்து சமைய‌ல் எ‌ண்ணெ‌ய்க‌ள், அனை‌த்து வகை பரு‌ப்புக‌ள், பெ‌ரிய வெ‌ங்காய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை அ‌திகளவு உய‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் ஏழை ம‌க்க‌ள் கடு‌ம் வேதனை‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

த‌மிழக‌த்த‌ி‌ல் த‌ற்போது நெ‌ற்ப‌யி‌ர்க‌ள் ‌விளை‌ச்ச‌ல் குறைவாகவே நட‌ந்து வரு‌கிறது. கா‌வி‌ரி டெ‌ல்டா மாவ‌ட்ட‌ங்களான ‌த‌ஞ்சாவூ‌ர், நாகை, ‌திருவாரூ‌ர் ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் நெ‌ற்ப‌யி‌ர்க‌ளு‌க்கு போ‌திய த‌ண்‌ணீ‌ர் இ‌ல்லாததா‌ல் கரு‌கிய ‌நிலை‌யி‌ல் காண‌ப்ப‌டு‌கிறது.

கா‌வி‌ரி‌யி‌ல் த‌ண்‌ணீ‌ர் ‌திற‌க்க க‌ர்நாடக மறு‌த்து‌வி‌ட்டதையடு‌த்து த‌மிழக டெ‌ல்டா ‌விவசா‌யிக‌ள் 8‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டன‌ர். த‌ற்போது நெ‌ற்ப‌யி‌ர் ‌விவசாய‌ம் அறவே முடி‌ந்து‌வி‌ட்ட‌ ‌நிலை‌யி‌ல் அரிசி விலை ஒருமாதத்தில் கிலோ 4 ரூபாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவ‌ரி‌‌யி‌ல் ‌கிலோ 34 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட பொன்னி புழுங்கல்அரிசி, த‌ற்போது 38 முதல் 39 ரூபாய் வரை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ‌கிலோவு‌க்கு 4 ரூபாய் முதல் 5 ரூபாயாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது.

இதேபோல, கடந்த மாதம் 40 ரூபாய்க்கு விற்பனையான பொன்னிபச்சரியோ, தற்போது 5 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இட்லி அரிசி விலை 30 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக இருக்கிறது.இந்த விலை நிலவரம் அரிசி மண்டியில் விற்கப்படும் விலையே.கடைகளுக்கு விற்பனைக்கி வரும்போத இதன் விலையில் ஓரிருரூபாய் கூடுதலாக இருக்கும்.

தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலுமே அரிசி விலைஅதிகரித்துள்ளதாக அரிசி மண்டி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை ஏற்றத்தால் விற்பனை சரிந்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமன்றி,அரிசி மண்டி உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Image result for அரிசி

இதேபோ‌ல் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையும் கடுமையாகஅதிகரித்துள்ளது. 70 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனையான கடலைப்பருப்பு த‌ற்போது 12ரூபாய் அ‌திக‌ரி‌த்து 82 ரூபாயாக ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

64 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட துவரம் பருப்பு கிலோவுக்கு 6 ரூபா‌ய் உய‌ர்‌ந்து 70 ரூபா‌ய்‌க்கு ‌‌‌வி‌ற்க‌‌ப்படு‌கிறது.

60 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்ட உளுத்தம்பருப்பு ‌கிலோவு‌க்கு 4 ரூபாய் உய‌ர்‌ந்து 64 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

80 ரூபா‌ய்‌‌க்கு ‌‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட பாசிப்பருப்பு விலை 10 ரூபாய் உய‌ர்‌ந்து 90ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

Image result for ஆயில்
இதேபோல, 190 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஒரு ‌லி‌ட்ட‌ர் நல்லெண்ணெய் கிலோவுக்கு 50 ரூபாய் அதிகரித்து 230 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

135 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்‌ப‌ட்ட கடலை எண்ணெய் ‌த‌ற்போது 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உய‌ர்‌ந்து 145 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

96 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்ப‌ட்ட தேங்காய் எண்ணெய் 6 ரூபாய் உய‌ர்‌ந்து 102 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

58 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட பாமாயில் த‌ற்போது 2 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து 60 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

88 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்க‌ப்ப‌ட்ட ‌ரீபைண்ட் ஆயில் த‌ற்போது 6 ரூபாய் உய‌ர்‌‌ந்து 94ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

‌‌விளை‌ச்ச‌ல் குறைவா‌ல் அ‌ரி‌சி ‌விலை மேலு‌ம் அ‌திக‌ரி‌க்க கூடு‌ம் எ‌ன்பத‌ா‌ல் ஏழைக‌ள் கடு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உ‌ள்ளன‌ர். இ‌ந்த ‌விலை உய‌ர்வு‌க்கு டீச‌ல் ‌விலை உய‌ர்வு‌ம் ஒரு காரணமாக அமை‌ந்து‌வி‌ட்டது எ‌ன்‌கிறா‌ர்க‌ள் அ‌ரி‌சி ம‌ண்டி உ‌ரிமையாள‌ர்‌க‌ள்.

த‌ற்போது வெ‌‌ங்கா‌ய‌ம் ‌விலை ‌சி‌ல்லறை ‌விலை‌யி‌ல் ‌கிலோ 30 முத‌ல் 35 வரை ‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது. இ‌ப்படியே செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ம‌க்க‌ள் க‌ண்‌ணீ‌ர் ‌சி‌ந்த வே‌ண்டியதுதா‌ன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*