Sliderசினிமா

யாரு? இது யாரு? கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி படம் செம வைரல்

Rate this post

யாரு? இது யாரு? கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி படம் செம வைரல்

சென்னை:
யாரு… யாரு… இது யாரு… என்று கேட்கும் அளவிற்கு மிரட்டல் கெட்டப்பில் உள்ள விஜய் சேதுபதியின் லுக் இணையத்தில் வெளியாகி அதிரடித்து வருகிறது.

96 படம் பல சிக்கல்களை சந்தித்தாலும் வெளியான நாள் முதல்  இன்று வரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. ரஜினியுடன் பேட்ட படத்தில் வில்லனாக மோதுகிறார் விஜய் சேதுபதி.

இதற்கிடையில் இவரது சூப்பர் டீலக்ஸ் படத்தில் பர்ஸ்ட் லுக் அசத்திவிட்டது. இந்நிலையில்தான் விஜய்சேதுபதியின் அடுத்த லுக் வெளியாகி செம வைரல் அடித்து வருகிறது. இது நான்கு மொழியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நயன்தாரா, சுதீப் நடிக்கும் சயீரா ரெட்டி படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதி சுதீப்புடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் இருவரும் மிரட்டலான கெட்டப்பில் அசத்துகின்றனர். இந்த படம்தான் இப்போது செம வைரலாகி வருகிறது.

Comment here