யூத் ரெட்கிராஸ் மற்றும் தேசிய மாணவர்படை சார்பில் இரத்ததான முகாம்

Rate this post

 

                        அண்ணாமலைப் பல்கலைக்கழக யூத்ரெட்கிராஸ் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் இரத்ததான முகாம் வேளாண்புலத்தில் 30.10.2018 செவ்வாயன்று நடைபெற்றது. இம்முகாமினை வேளாண்புல முதல்வர் முனைவர் மு.தானுநாதன் துவக்கிவைத்தார். யூத்ரெட்கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் S.ஐயப்பராஜா அனைவரையும் வரவேற்றார். தேசிய மாணவர் படையின் அதிகாரி சுபேதார் மேஜர் சந்திரமப்பா, ஹெவில்தார் சசி மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்க சிதம்பரம் பகுதி செயலாளர் C.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் B. தமிழரசன் மற்றும் இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் இராஜமூர்த்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாணவர்களை சோதித்து இரத்தித்தினை பெற்றனர். இம்முகாமில் அறுபது மாணவ-மாணவிகள் இரத்ததானம் அளித்தனர்.

                                    இம்முகாமிற்கான ஏற்பாட்டினை யூத்ரெட்கிராஸ் திட்ட அலுவலர்கள் முனைவர். J..நம்பி, V.பாலமுருகன், A.சிவராமன், A.ஸ்ரீமன்நாராயணன், M.விஜயபிரியா மற்றும் தேசிய மாணவர் படையின் அதிகாரி கேப்டன் முனைவர். R.கனகராஜன் ஆகியோர் செய்து இருந்தனர். மாணவ-மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட இரத்தம் அரசு காமராஜ் மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கியில் சேகரிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் இராமசந்திரன் மற்றும் வேளாண்புல பேராசிரியர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*