யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கிரெடிட் ஆபீசர் வேலை வாய்ப்பு!

5 (100%) 1 vote

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிற்கு முக்கிய இடம் உள்ளது. போர்ப்ஸ் 2000 நிறுவனங்களுள் சிறந்த நிறுவனமாக பட்டியலிடப்பட்ட வங்கியாகும் இது. நாடு முழுவதும் கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை என்ற பெயர் பெற்ற இந்த வங்கியில் கிரெடிட் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 200 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது : விண்ணப்பதாரர்கள் 23 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வருட காலத்திற்கு ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி ஒன்றில் கிரெடிட் புரொபோசல்களை அதிகாரி பதவியில் இருந்து பரிசீலித்த அனுபவம் தேவைப்படும். எம்.பி.ஏ., ஃபினான்ஸ், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எப்.ஏ., எப்.ஆர்.எம்., சி.ஏ.ஐ.ஐ.பி., போன்ற தகுதிகள் உடையவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

தேர்ச்சி முறை : ஆன்லைன் வாயிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.600/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 21.10.2017

மேலும் விவரங்களுக்கு ; https://www.unionbankofindia.co.in/abt_recruitmentaspx.aspx

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*