உலகம்

ரஷ்ய அதிபர் கார் மீது மர்ம மனிதர்கள் தாக்குதல் – வெளியான பரபரப்பு தகவல்

Rate this post

உக்ரைன் – ரஷ்ய போர்

கடந்த 7 மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இப்போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள், இருப்பிடம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். ஆனாலும் இப்போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொல்ல முயற்சி நடைபெற்றதாக ஸ்பெயினிலிருந்து யூரா வீக்லி நியூஸ் என்ற ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

சம்பவத்தன்று புதின் காரில் இல்லத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் காருக்கு முன்னும் பின்னும் மற்ற கார்களில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்தனர்.

மர்ம மனிதர்கள் தாக்குதல்

ஆனால், புதின் கார் 3-வதாக சென்று கொண்டிருந்தது. அப்போது புதின் கார் மீது மர்ம மனிதர்கள் குண்டு வீசியதாகவும், அந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியதாகவும் அந்த ஊடகம் செய்தி தெரிவிக்கிறது.

இதனால் புதின் சென்ற காரிலிருருந்து புகை வெளியேறியுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் காரிலிருந்து புதினை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். அவரை பாதுகாப்பு போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

காயமின்றி உயிர் தப்பிய புதின்

இதனால் புதின் காயமின்றி உயிர் தப்பியதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால்,இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்னை கொல்ல இதுவரை 5 முறை முயற்சி நடந்ததாகவும். அதில் நான் உயிர் தப்பினேன் என்று கடந்த 2017-ம் ஆண்டு புதின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment here