அரசியல்

ராஜன் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை : சுப்ரமணியசாமி

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவ்வப்போது சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி. ரகுராம் ராஜன் மீதான சுப்ரமணியசாமியின் கருத்தை பிரதமர் மோடியே மறைமுகமாக கண்டித்தும் சுப்ரமணியசாமி, ரகுராம் ராஜனை விடுவதாக இல்லை.

ரகுராம் ராஜனை கடுமையாக தாக்கி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி. அதில், ரகுராம் ராஜன் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்கலாம். வர்த்தகம் படித்திருக்கலாம். அதனால் அவர் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல என தெரிவித்துள்ளார். இது மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Comment here