வரலாறு

ராஜராஜ சோழனின் கல்வெட்டு சிதம்பரத்தில்

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள்

சிதம்பரம் கமலீஸ்வரன் கோயிலில் ராஜராஜசோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது சிதம்பரம் நகரில் கோவில் இல்லாதது தெருவே கிடையாது
நான் அந்த கமலீஸ்வரன் கோயில் தெருவழியாகத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்
கல்லூரிக்குப்போகும் போது சைக்கிளில் சென்றிருக்கிறேன் .
அங்கே எனது நண்பர் T.R.Rangasamy வசித்துவந்தார் . தினமும் அவரை அழைத்துக்கொண்டு கல்லூரிக்குச் செல்வேன். நான் சிதம்பரத்திலேயே மின்வாரியத்தில் சேர்ந்தேன் .அவர் கோவை சென்று மின்வாரியத்தில் உயர்பதவிகள் வகித்து ஒய்வு பெற்றதாக அறிந்தேன் .இப்போது இதை எழுதக்காரணம் முகநூல் எங்கள் இருவரையும் இணைக்குமா என்ற ஆவலில் தான் கமலீஸ்வரன் கோயில் தெரு என்றதும் அவர் நினைவு வந்துவிட்டது .

சிதம்பரம் நகரில் உள்ள பழமை வாய்ந்த கமலீஸ்வரன் கோயிலில் சோழ மன்னான முதலாம் ராஜராஜ சோழன் காலத்து (கிபி 985-1014) இரு கல்வெட்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.: இக்கல்வெட்டானது கோயில் தென்புற தேவகோட்ட சுவற்றில் உள்ளது. 5 வரி கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ள இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கல்வெட்டாகும்.
ஸ்ரீராஜ தேவர்க்கு யாண்டு என தொடங்கும் கல்வெட்டு, பெரும்பற்றப்புலியூர் மூலபருடையார்க்கு அளிக்கப் பெற்ற அறக்கொடையை குறிக்கிறது. கல்வெட்டில் ராஜராஜ சோழன் உத்தமப்பிரியன் என்று போற்றப்படுகின்றான் .கூத்தாட்டுக்காணி: ராஜராஜன் தனது சிறிய தந்தையான உத்தமசோழன் பால் கொண்டிருந்த அன்பால் உத்தமபிரியன் என்றும் குறிக்கப்பட்டுள்ளான்.

இதே புனைப்பெயர் முதலாம் ராஜேந்திரனுக்கும் இருந்ததாக கல்வெட்டுகள் போற்றும். உத்தமசோழன் நிழைவாக ராஜராஜன் உத்தமதானபுரம் என்ற நகரத்தையும், பழையாறுக்கு அருகில் (கும்பகோணம்த்தில் அமைத்திருந்தான்.

மேலும் ஆடல் வல்லான் ஒருவனுக்கு ராஜராஜன் அளித்த கூத்தாட்டுக்காணி பற்றிய விபரங்களையும் கமலீஸ்வரன் கோயில் கல்வெட்டு தமிழ் வரிவடிவத்தில் தெரிவித்துள்ளது.

கூத்தாட்டுக்காணி என்பது கூத்தாடும் கலைஞர்களுக்கு சோழர்கள் வழங்கிய நிலதானமாகும்.
பண்டைய நாளில் சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்பலியூர் என்ற பெயர் கொண்டது: கல்வெட்டு குறிக்கும் பெரும்பற்றப்புலியூர் சிதம்பரத்தில் பழைய பெயராகும்,

மூலபருடையார் என்று கல்வெட்டு குறிக்கும் சொல் இறைவன் தில்லை மூலட்டானத்து (ஆதிமூலநாதர்) எனும் இறைவனையே குறிக்கிறது. சோழர் காலத்தில் சிதம்பரம் நகரம் பெரும்பற்றப்புலியூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதன் வாயிலாக கமலீஸ்வரன் கோயிலின் பழமை ஆயிரம் ஆண்டுகளையும் கடந்தது என்பதை அறிய முடிகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்…..

இது முக்கிய தகவல்கள் கொண்ட ஒரு கல்வெட்டாகும் .சிதம்பரத்தைச் சுற்றி இன்னமும் வரலாறு சிறப்பு வாய்ந்த செய்திகளைக் கூறும் கோவில்கள் உள்ளன .அவை இளமை ஆக்கினார் கோவில் , அந்தந்தீஸ்வரன் கோவில் ,நாகச்சேரிக் குளம் மற்றும் பல தொன்மை வாய்ந்த மடங்களும் உள்ளன .
இனமும் ஆராயவேண்டியது உள்நாட்டிலும் , சோழர் சென்ற அனைத்து நாடுகளிலும் விரிவாகத் தேவை .
அண்ணாமலை சுகுமாரன்

Comment here