இந்தியா

ராஜஸ்தான் சட்டசபைக்கு பசு மாட்டை கூட்டிக்கிட்டு வந்த பாஜக எம்.எல்.ஏ…!

Rate this post

ராஜஸ்தான் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அப்போது, சட்டசபை கூட்டத்தொடருக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவத், ஒரு பசுவை தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.

இது குறித்து அவர் பேசுகையில் –

மாடுகள் லம்பி ஸ்கின் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மாநில அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. பசுக்களுக்கு பரவி வரும் லம்பி ஸ்கின் நோய் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பசுவை அழைத்து வந்தேன் என்றார்.

லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த வலியுறுத்தி ராஷ்டிரிய லோக்தந்த்ரிக் கட்சி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

Comment here