உலகம்

ராணி எலிசபெத் உடல் நாளை அடக்கம் – உலக தலைவர்கள் லண்டனுக்கு வருகை

Rate this post

ராணி எலிசபெத் உடல் நாளை அடக்கம் செய்யப்படுவதையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக உலக தலைவர்கள் லண்டனுக்கு வருகை தந்துக்கொண்டிருக்கின்றனர்.

ராணி 2ம் எலிசபெத் இறுதிச் சடங்கு

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி கடந்த 14-ந் தேதி முதல் லண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து லட்சக்கணக்கான மக்கள் ராணி எலிசெபத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நாளை நடக்க இருக்கிறது.

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இங்கிலாந்து முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில், நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.

உலக தலைவர்கள் லண்டனுக்கு வருகை

ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் 2 ஆயிரம் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் லண்டன் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தார்.

ஜோ பைடன் இன்று ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்.

ராணி எலிசெபத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியா சார்பில் நேற்று டெல்லியிலிருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர். அதே போல மற்ற உலக நாட்டு தலைவர்களும் லண்டன் நகருக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

Comment here