உலகம்

ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி

Rate this post

மறைந்த ராணி 2ம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ராணியின் உடலுக்கு அஞ்சலி

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் ராணியின் உடலுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று ராணி 2-ம் எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லண்டன் சென்ற இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள உள்ளார்.

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

 

Comment here