உலகம்

ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மக்கள்

Rate this post

ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் bசெய்யப்பட்டது. மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.

ராணி 2ம் எலிசபெத் மறைவு

ராணி 2ம் எலிசபெத் (97) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார்.

அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இன்று பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது.

இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம்

ராணி எலிசபெத் உடல் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது.

அப்போது சவப்பெட்டி மீது ராணிக்கான கிரீடம், செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அவரது உடல் விண்ட்சர் கோட்டையின் வழியாக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தார்கள்.

ஜார்ஜ் தேவாலயத்துக்குள் சவப்பெட்டி கொண்டு வந்ததும், அங்கு கல்லறை ஜெபம் நடந்தது. ஜெபத்தில் தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

ஏகாதிபத்திய அரச மணிமுடி, ராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்பட்டது. பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டு அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comment here