ஆன்மிகம்தமிழகம்பிரத்யகம்

ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சாதி, மதங்களைக் கடந்து, மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என்ற உயரிய கருத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்திய மகான் ராமானுஜர். இவரது ஆயிரமாவது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சன்னதியில் எழுந்தருளியிருக்கும் ராமானுஜருக்கு, இன்று அதிகாலை, தங்க ஆபரணங்கள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ராமானுஜர், நான்கு சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனிடையே, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற வேப்பிலை மாரியம்மன் ஆலயத்தில், சித்திரைத் திருவிழாவையொட்டி வேடுபறி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. காட்டு முனியப்பன் ஆலயத்திலிருந்து, குதிரைத் தேரில் வேப்பிலை மாரியம்மன் நகர்வலம் வந்து, வேடுபறி கண்டருளினார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.ramanujarbirthday10052016-big

Comment here