இந்தியா

ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்தால் வரிவிதிப்பு

2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் காகித பண புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வங்கியில் சொந்தப் பணத்தை ரொக்கமாக திரும்ப எடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.

எனவே ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் தேவை எழலாம் என்பதால் அவர்களுக்கு இந்த 2 சதவீத வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் இந்த 2 சதவீத வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிப்பது என்பதை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment here