ரூ.45,000 கோடி கடன் செலுத்தாதவருக்கு ரூ.58,000 கோடி ஒப்பந்தம் : ராகுல்

Rate this post

இந்திய தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தும், மோடி அரசு 58 ஆயிரம் கோடி ரூபாய் ரபேல் ஒப்பந்தம் செய்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டிவிட்டரில் கருத்து கூறியதாவது, தொழிலதிபர் அனில் அம்பானி 45 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார். அதனால், பணத்தை திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவுக்குச் செல்லக்கூடாது என்று இவரைத் தடுக்கக்கோரி சில நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளன. ஆனால், பாதுகாப்புத் துறையில் எந்தவிதமான அனுபவம் இல்லாத அந்தத் தொழிலதிபருக்கும் அவரின் நிறுவனத்துக்கு ரபேல் விமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் மோடியின் ஸ்டைலா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான். ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ராகுல் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*