பொது

ரெப்போ ரேட் விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது ரிசர்வ் வங்கி

Rate this post
மும்பை
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஆர்பிஐ நாணய கொள்கைக் கூட்டம் நடைபெறும். அதில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். நடப்பு நிதி ஆண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
இதில், 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டது. குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.25ல் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.  நுகர்வோர் பணவீக்கம், ஆர்பிஐ இலக்கான 4 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. பிப்ரவரி மாதம் பணவீக்கம் 2.57 சதவீதமாக இருந்தது.   ரெப்போ ரேட் குறைப்பின் மூலம் வீட்டுக்கடன் வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comment here