சினிமா

‘லவ் ஸ்டோரி’ திரைப்பட இயக்குநர் காலமானார்

                                1970-ஆம் ஆண்டின் வெற்றி திரைப்படமான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநரான கனடாவின் ஆர்தர் ஹில்லர், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காலமானார். அவருக்கு வயது 92.

நகைச்சுவை திரைப்படங்கள், போர்க் கதைகள் மற்றும் இசை சார்ந்த திரைப்படங்கள் ஆகியவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஹில்லர் இயக்கியிருந்தாலும், ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தாலே அவர் நன்கு அறியப்படுகிறார்.

துரதிஷ்டவசமான இரண்டு இளம் காதலர்களின் உணர்ச்சிமிகு கதை தான் லவ் ஸ்டோரியின் திரைக்கதையாகும். இந்த காதலர்கள் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரியான் ஓ நீல் மற்றும் அலி மெக்கிராவ் ஆகியோரை பெரிய நட்சத்திரங்களாக இத்திரைப்படம் மாற்றியது.

”மன்னிப்பு கோருகிறேன் என்ற சொல்லை எப்போதும் சொல்ல தேவையில்லாதது தான் காதல்” என்ற பிரசித்தி பெற்ற வசனம், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

ஹாலிவுட் திரைப்பட உலகில் செல்வாக்கு மிகுந்தவராக விளங்கிய ஹில்லர், 1989 முதல் 1993 வரை அமெரிக்க இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

பின்னர், வருடம் தோறும் நடைபெறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவினை நடத்தும் அமைப்பின் தலைவராக செயல்பட்டார்.

Comment here