இந்தியாஉலகம்விளையாட்டு

வங்கதேசத்தை வெற்றிக் கொண்டு இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி

Rate this post

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெற்றிகொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. இதில், இந்தியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்கதேசம் 46.2 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், சமீர் செய்தரி 36 ரன்களும், அனுராவத் 35 ரன்களும் எடுத்தார். வங்கதேச தரப்பில் ஷோரிஃபுல் 3 விக்கெட்களை எடுத்தார். பின்னர், வங்கதேசம் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கியது. இதில்,ஷமீம் ஹூசைன் 59 ரன்களும், அக்பர் அலி 45 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் மோஹித் ஜங்ரா, சித்தார்த் தேசார் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதனிடையே, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் 2வது அரையிறுதியில் இன்று மோதுகின்றன. இதில், வெற்றி பெறும் அணிகள் இந்தியாவுடன் மோத உள்ளது.

Comment here