சினிமாதமிழகம்பொது

வடசென்னை படத்தின் இசை 23ம் தேதி வெளியீடு : லைகா அறிவிப்பு

வடசென்னை படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர் உள்பட பெரிய நட்சத்திர நடித்துள்ள திரைப்படம் படம் வடசென்னை. வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கை முறை, அரசியல் சம்மந்தப்பட்ட வசனங்கள் இந்த திரைப்படத்தில் பிரதிபலிக்கும் என கூறப்படுகிறது. இதனால், வடசென்னை திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், வட சென்னை வரும் அக்டோபரில் வெளியிடப்படும். அதற்கு முன்னதாக, வரும் செப்டம்பர் 23ம் தேதி படத்தின் இசை வெளியீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சந்தோஸ் நாராயணன் இசை அமைத்து உள்ள இப்படத்துக்கு, தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் படத்தை தயாரித்து உள்ளது. லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

Comment here