ஆயுர்வேதம்பொதுமருத்துவம்

வயிற்று பிரச்சனையை போக்கும் கொய்யா இலை

Rate this post

உணவு பழக்க வழக்கத்தினால் பலருக்கு வயிற்று போக்கு, செரிமான கோளாறுகள் போன்றவை எளிதாக ஏற்பட்டு வருகிறது. அவர்கள் தங்களின் அன்றாட உணவு பழக்கத்தில் கொய்யா இலையை சேர்த்து சாப்பிட்டால், வயிற்று பிரச்சனை அறவே நீங்கும். அதாவது, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடனே நல்ல தீர்வு கிடைக்கும். அத்துடன், எட்டு கொய்யா இலையை ஒன்றரை லிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினமும் மூன்று முறை குடித்து வர தீராத வயிற்று வலி காணாமல் போய்விடும். கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் உங்கள் உங்கள் எடை குறைவதை நீங்கள் காணலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள், கொய்யா இலையின் டீயை தொடர்ந்து குடித்து வந்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, வயிற்றில் உள்ள பக்டீரியாக்களை அழித்து, செரிமானம் நடைபெறும். கொய்யா இலையில் போடும் டீயானது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை பராமரித்து கல்லீரலுக்கு சிறந்த டானிக்காக பயன்படுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.

Comment here