பிரத்யகம்

வருமான வரியை திரும்ப பெறுவது எப்படி?

  • வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் தனிநபர்கள் திரும்பப் பெறுவதில் உள்ள முழு நடைமுறைகளையும் புரிந்துகொண்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான இறுதி நாள் ஜூலை 31, 2017 நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  • சரியாக வரி தாக்கல் செய்துள்ளோமா என்று எப்படிச் சரிபார்ப்பது வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களைப் பூர்த்திச் செய்த பிறகு “Calculate Tax” பொத்தானை கிளிக் செய்யவும். நீங்கள் வழங்கிய தகவல்களிலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய வரியை உங்கள் கம்ப்யூட்டர் கணித்துவிடும். கூடுதல் வரியை திரும்பப் பெற நீங்கள் தகுதியானவராக இருந்தால் அது ‘Refund’ வரிசையில் தோன்றும். அடுத்தபடியாக நீங்கள் வருமான வரிக் கணக்கினை e-file முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

  • வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு என்ன ஆகும்? உங்கள் கணக்கினை தாக்கல் செய்து சரிபார்க்கப்பட்ட பிறகு வருமான வரித்துறை அவற்றைக் கவனமாகப் பரிசீலிக்கும். அதனைத் தொடர்ந்து பிரிவு 143(1) ன் படி நடவடிக்கை குறித்துத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் தகவல் கீழ்குறிப்பிட்டவற்றில் ஏதாவதொன்றாக இருக்கலாம்

  • கணக்கு ஒத்துப்போதல் உங்கள் வரி கணக்கீடு வரித்துறையினரின் கணக்கோடு ஒத்துப் போனால் நீங்கள் மேற்கொண்டு வரி செலுத்த வேண்டியதில்லை, அவ்வாறு ஒத்துப்போகா விட்டால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியதிருக்கும். அல்லது உங்களின் திரும்பப் பெறும் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் அல்லது பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். உங்கள் கணக்கீடு வரித்துறையினரின் கணக்கீட்டுடன் ஒத்துப்போனால் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுத் திருப்பப்படும் தொகை குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.

  • தகவல் எப்படி அளிக்கப்படும் ஆன்லைன் மூலம் இவ்வாறு செய்யும்போது உங்களுக்கான தகவல் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் தொலைப்பேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும்.

  • நிலைகள் குறித்துச் சர்பார்ப்பது எப்படி? இந்த நடைமுறைகளின் அவ்வப்போதைய நிலைகள் குறித்து வருமான வரித்துறையின் இணையதளத்தில் e-filing தளத்தில், ‘My Account’ தலைப்பின் கீழ் ‘Refund / Demand Status’ தலைப்பைச் சொடுக்கினால் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://tin.nsdl.com என்ற இணையதளத்திற்கும் செல்லலாம். உங்கள் PAN எண்ணையும் கணக்கு ஆண்டையும் பதிந்த உடன் உங்கள் நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளமுடியும். திருப்பப்படும் தொகை உங்கள் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் அல்லது காசோலையாக வழங்கப்படும்.

  • பணத்தைத் திரும்பப்பெற சரியாகச் செய்ய வேண்டியவை இதற்காக நீங்கள் கீழ்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் சரியான வங்கி தகவல்கள், IFSC எண், வங்கி கணக்கு எண், MICR எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். நிரந்தரக் கணக்கு எண் PAN எண்ணை உள்ளிடும்போது தவறேதும் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Comment here