வர்ம முடிச்சும் உடலுக்கு வருகின்ற நோயைத் தடுக்கும்

Rate this post

வர்ம ரகசியம் – I (2)

தொப்பூழ் என்ற இடத்திற்கு எத்தனைப் பெயர்கள், ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு செயல்கள். நேற்று விட்டுப் போனவற்றுள் இன்னும் சில.

பொகுட்டு, துரியமையம், நெட்டங்க மையம், அன்னரசவாசல் இப்படி அதன் பெயரும் செயலும் விரிந்து கொண்டே செல்லும்.

இவற்றின் செயல்களை எல்லாம் மூன்று நாள் அல்லது ஓராண்டில் படித்து முடிக்க முடியாது. அதற்கு ஆண்டுகள் பல தேவை. எனவே வர்மம் என்பது சிறு குவளையில் உள்ள நீர் அல்ல. இதை நுணிகிப்படிப் போருக்கு காலம் பதில் சொல்லும்.

ஒவ்வொரு வர்மத்தையும் இப்படி ஆராய்ந்து படித்தால்தான் சிகிச்சைக்கு வர்மத்தைப் பயன்படுத்த முடியும்.

உடலில் உள்ள ஒவ்வொரு வர்ம முடிச்சும் உடலுக்கு வருகின்ற நோயைத் தடுக்கும் தடைக்கல்லாகும். உதாரணமாக கவுளிக்காலம் என்ற முடிச்சு ஆற்றல் சிதைந்தால் கைநடுக்கம் வரும். கைகால்வலிப்பு வராது. ஆனால் கவுளிக்காலத்தை வைத்து வலிப்பு நோயை நீக்க முடியும். இதற்குக் காரணம் அந்தக் கவுளிக்காலத்தின் அருகே இருக்கும் ‘இடைப்பேராய வர்மம்’ முக்கியக் காரணம். இதுபோல 7 வர்மங்கள் அங்குள்ளன. அவற்றிக்கான ஆதாரங்களும் உள்ளன. இதே கவுளிக்காலம் தோள்பட்டை வலியையும் போக்கும்.

இப்படி ஒவ்வொரு வர்மமும் அதனைச் சார்ந்திருக்கும் ரகசிய வர்மங்களால் உடல் நோயை நீங்கும் வல்லமை உடையன.

இவற்றையெல்லாம் படித்து உணர்வதற்கு ஒரு முழு ஆயுள்காலம் தேவை. அத்துனை விரிவானது வர்ம ரகசியம். அதில் ஒரு சிறு துளியைத்தான் நாம் கடந்த 2003 – ஆம் ஆண்டு முதல் காட்டி வந்தோம். இதுவே முழுமையான வர்மக்கல்வி என்று நினைத்து நின்றுகொண்டு காலை நீட்டியவர்கள் நிலை களத்தில் புகும் பொழுதுதான் தெரியும். இதனால்தான் வர்மத்திற்கு ‘மர்மம்’ என்ற பெயரும் உண்டு என்பதை உணரவைக்கிறது.

வளர்க சிவம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*