வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Rate this post

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடந்த மே 3-ம் தேதி தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் நடைமுறை பல்வேறு நாடுகளில் உள்ளதாகத தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் கிராமப்புறத்தில் வசிப்பவர்களும் வழக்கு விசாரணைகள் குறித்து அறிந்துக் கொள்ள முடியும் என்றும் மத்திய அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வரும் 23-ம் தேதி தாக்கல் செய்யவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*