தமிழகம்

வாகனம் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து – 3 பேர் பலி – 10 பேர் படுகாயம்….!

Rate this post

உளுந்தூர்பேட்டை அருகே சிமெண்ட் கலவை வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து சிமெண்ட் கலவை தொழிலாளிகள் தங்கள் பணிகளை முடித்துவிட்டு 15க்கும் மேற்பட்டோர் கலவை வாகனத்தில் தங்களது வீட்டிற்கு சென்றனர்.

வாகனம் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து

அப்பொழுது உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் மேம்பாலம் அருகில் செல்லும் போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதி விபத்து விபத்துக்குள்ளானது.

இதில் சிமென்ட் கலவை வாகனத்தில் சென்ற மூன்று பேர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த மூன்று பேரை உடலை உடல் கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் போக்குவரத்துத் துறையினர் விபத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை அப்புறப்படுத்தப்பட்ட பின்பு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

பின்னர் திருநாவலூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த சிமெண்ட் கலவை தொழிலாளி மூன்று பேர் உயிரிழந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் ஏற்பட்டதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Comment here