பொது

வாழைப்பழம் பேக்

சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

அதற்கு ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும்.

அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.

பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.

Comment here