இயல்தமிழ்தமிழகம்மாவட்டம்வேளாண்மை

வாழை உயர்தொழில்நுட்ப சாகுபடி கருத்தரங்கு நிறைவு விழா தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பாக வாழை உயர்தொழில்நுட்ப சாகுபடி கருத்தரங்கு கடலூர் வட்டம் நடுவீரப்பட்டு கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கருத்தரங்கின் நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் முன்னிலையில்இ தொழில்துறை அமைச்சர்.எம்.சி.சம்பத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

sep-18-mஇக்கருத்தரங்கில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் கூறியதாவது
இந்த கருத்தரங்கில்; விவசாயிகள் வாழை எப்படி சாகுபடி செய்ய வேண்டும்இ எந்த அளவிற்கு அதிகப்படியான வாழைப்பழங்களை பெறவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். முக்கனிகளில் இரண்டு கனிகளான பலா மற்றும் வாழை கடலூர் மாவட்டத்தில்தான் அதிகம் கிடைக்கின்றது. வாழை சாகுபடியில் வேளாண் பெருங்குடி மக்கள் நுண்ணுயிர் ஊட்டும் பாசனம் செய்ய முன்வரவேண்டும். இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 75 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை மானியம் அளித்துள்ளார்கள். நடப்பு நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையில் 88707 ஏக்கர் நிலத்தில் இந்த நுண்ணுயிர் ஊட்ட பாசனத்திற்காக ரூ.319 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவேஇ அனைத்து விவசாயிகளும் இந்த நுண்ணுயிர் ஊட்ட பாசனம் செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஐந்தாண்டுகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ரூ.917 கோடி நுண்ணுயிர் ஊட்ட பாசனத்திற்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறைக்காக இந்த நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் ரூ.518 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பசுமை குடில் அமைக்கும் திட்டத்தில் மலர் சாகுபடியை 13 லட்சம் ஏக்கரிலிருந்து 16 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. வாழையிலிருந்து மதிப்புகூட்டு பொருட்களை பெற வேண்டிய தொழில்நுட்பங்களை விவசாய பெருமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோளாகும்.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.புதூர் கிராமத்தினை சார்ந்த திருமதி.நா.விருத்தாம்பாள் அவர்கள் வாழையில் மதிப்பு கூட்டுபொருளாக வாழைதண்டுஇ வாழை பூஇ வாழைகாய்களில் இருந்து ஊறுகாய் தயார்செய்யும் பயிற்சியினை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தில் பெற்று சிறுதொழிலாக நடத்திவருவதற்கு எனது பாராட்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழைசாகுபடிசெய்யும் விவசாயிகள் இதேபோன்றுமதிப்பு கூட்டுபொருட்கள் தயார்செய்து அதிகவருவாய் ஈட்டவேண்டும் என்று வாழைவிவசாய பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். இதுபோன்ற கருத்தரங்குகளில் வாழை சாகுபடி குறித்த தொழில்நுட்பங்களையும்இ வியாபார உத்திகளையும் விவசாய பெருமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கடலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் வாழை சாகுபடி செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியில வேளாண்மை இணை இயக்குநர்.பெ.ஹரிதாஸ்இ தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.க.திரவியம்இ விருத்தாச்சலம் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எம்.எஸ்.அனீசாராணிஇ வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்இ வேளாண்மை துறை அலுவலர்கள்இ உள்ளாட்சி பிரதிநிதிகள்இ விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.sep-18-l

Comment here