விஜய் அரசியல் பேச்சை மழுங்க செய்யும் ரஜினி போஸ்டர்

Rate this post

நடிகர் விஜய் சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய அரசியல் பேச்சை மழுங்க செய்யும் வகையில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் “பேட்ட” படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது. ரஜினி ரசிகர்களிடையே இந்த மோஷன் போஸ்டர் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து இன்று “பேட்ட” படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் சர்க்கார் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேச்சாக அமைந்தது. இந்த நிலையில், இதனை மழுங்கச் செய்யும் வகையில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் படத்தை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*