Sliderஇந்தியா

விஜய் மல்லையாவை திருடன்னு சொல்லாதீங்க… நிதின் கட்காரி கருத்துக்கு கண்டனம்

Rate this post

புதுடில்லி:
இதுதான் எங்கப்பா குதிருக்குள் இல்லை என்பதோ என்று கேட்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எதற்காக தெரியுங்களா?

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் இப்படி தப்பி செல்ல பாஜதான் காரணம் என்று எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,  தொழிலதிபர் விஜய் மல்லையா, இதற்கு முன், அனைத்து கடன்களையும் முறையாக செலுத்தி உள்ளார். விமான துறையில், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், கடனை செலுத்தவில்லை. இதனால், அவரை திருடன் என்றும், மரியாதை இல்லாமலும் விமர்சிப்பதையும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. 

Comment here