விநாயகர் சதூர்த்தி : 2,520 சிலைகள் பிரதிஸ்டை;10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Rate this post

இந்தியா முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோயில்களில் சிறப்பு வழிபாடு மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் ஐந்து முக விநாயகர், ஐஸ்கட்டி விநாயகர், பழங்கள் மூலம் செய்யப்பட்ட விநாயகர் என விநாயகரை விதவிதமாக பிரதிஸ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இதில், விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி சென்னை நகரில் 2 ஆயிரத்து 520 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நகர முழுவதும் சாலை ஓரங்களில், மக்கள் கூடும் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஸ்டை செய்து வழிபட இருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் விநாயகர்சதூர்த்தியை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சிலை கரைப்பு எங்கே ?

சென்னையை பொறுத்தவரையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய 5 இடங்களில் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினம் என்பதால், கடற்கரை பகுதியில் அதிக நபர்கள் கூடுவார்கள் என்பதால், மக்களின் நலனுக்கு ஏற்ப பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*