வியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்”

Rate this post

இன்று மிக முக்கியமான நாள் முழு அளவில் வல்லமை பொருந்தி…வியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்” படத்தை எதிர்த்து போராடி ஞாயம் பெற்றிட முயற்சித்த நண்பர் வருண் ராஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளார்…இதற்கு துணைநின்ற திரு.பாக்கியராஜ் சார் மற்றும் அனைவருக்கும் நன்றி!!! பல வருடங்கள் முன்பு… வருண் ராஜேந்திரன் போன்று திரு சசிக்குமார் தயாரித்து இயக்கிய ‘சுப்பிரமணியபுரம்’ கதை என்னுடையது என்று போராடினேன்… அந்தக்கதைக்கு நான் வைத்திருந்த பெயர் ‘சந்துரு’ என் உடன் பிறந்த சகோதரனின் பெயர்… ரவுடியிசம் என்பது ஒருவித போதை அந்த அப்போதையில் நட்புக்காக கொலைசெய்வது தாதாவாகுவது என்கிற கோணத்தில்…மதுரை அண்ணா பேருந்துநிலையம்,மதிச்சியம், ஆழ்வார்புரம்,எஸ்எம்பி காலனி, என்.எம்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த உண்மை நிகழ்வுகளை தொகுத்து திரைக்கதை அமைத்து இயக்குநாராகும் முயற்சியில் இருந்தேன். வின்னர் ராமச்சந்திரன் தயாரிக்க…நடிகர் ஜெய்(சந்துரு),நடிகர் சூரி(கருவாயன்) நடிகர் விசித்திரன்(அம்பலம்), நடிகர் பூபதி(கொம்ப) பிரதான கதாபாத்திரங்களாக போட்டோஷூட் இசை தேவா,பாடல் சினேகன்,படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ்,ஒளிப்பதிவு எஸ்.டி.கண்ணன், கலை ‘டிராஸ்ட்கி’மருது சார் என பிரமாண்டமாக துவங்கியிருந்தது. பாடல் பதிவுகூட நடந்தது.. நடிகர் கஞ்சா கருப்பு சந்துரு கதையில் ‘பிளாக்’பாண்டி என்கிற சிறிய பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. நடிகர் ஜெய்_க்கு மதுரை பாசை கற்றுக்கொடுக்க தினமும் அலுவலகம் வருவார். எனது துரதிஷ்டம் படம் ட்ராப் ஆனது… அடுத்தடுத்து ஒரு முன்னூறு பேரிடமாவது சொல்லியிருப்பேன்…அதில் இயக்குநர் திரு.பாலா, திரு.ஞானவேல்ராஜா,நடிகர் திரு.சூர்யா,நடிகர் திரு.கார்த்தி… இந்த சூழலில் நடிகர் சூர்யா இந்தக்கதை பண்ணலாம் என்றதும் மகிழ்ச்சி…. தினமும் அலுவலகம் சென்று ஞானவேல் ராஜா அவர்களை பின்தொடர்ந்தேன்… ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி அவர்களிடம் கதை சொல்லியபோது… அவர் ‘சுப்ரமணியபுரம்’பற்றி சொன்னார். அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்தேன். என் சந்துரு கதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவாகியிரு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*