அரசியல்தமிழகம்மாவட்டம்

விருத்தாசலம் எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வன் ஆளும் எடப்பாடி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டு.

 

கடலூர் அதிமுக அம்மா அணி கிழக்கு மாவட்ட செயலாளரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வன் தனது தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாத் மு.வடநேரே –வை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் லாபத்தில் இயங்கும் என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டிக்க தமிழக அரசுக்கு துணிவில்லை எனவும், தமிழக அரசு பல்வேறு துறைகளில் ஊழலில் மலிந்து இருக்கிறது என OPS கூறியது உண்மை ஆனால் எதனால் ஒபிஸ் ஊழல் நிறைந்த அரசுடன் இணைந்தார் என கேள்வி எழுப்பினார், குறிப்பாக தமிழகம் முழுவது தெருவிளக்குக்கு பயன்படும் எல்.இ.டி லைட் போடுவதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துல்லாதாக குற்றசாட்டு, மேலும் கடலூர் ஜவான் பாவன் இணைப்பு சாலை மீண்டு மீண்டு போடுவதில் மாவட்ட தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பல கோடி முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு. மற்றும் கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் EID பாரி சக்கரை ஆளை கழிவை கெடிலம் ஆற்றில் கலப்பதை கண்டுல்லாமல் இருப்பதற்க்கு, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்றுதராமல் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆளை நிர்வாகத்துடன் துணை போவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறுவதாக கடலூர் அதிமுக அம்மா அணி கிழக்கு மாவட்ட செயலாளரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ வி.டி.கலைச்செல்வன் கூறினார். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல இடங்களில் பதிக்கப்பட்ட சூழலில் தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவறியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் நேரத்தில் எதற்காக உள்ளாட்சி துறை அமைச்சர்   ஆஸ்திரேலியா பயணம் செய்கிறார் என கேள்வி எழுப்பினார்.

Comment here