ஆன்மிகம்மாவட்டம்

விருத்தாசலம் ஏகநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

விருத்தாசலம் ஏகநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா –  துவக்கம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெண்ணாடம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஏகநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 10 ந் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10.00 மணிக்கு மேல் மணிமுத்தாற்றில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக சன்னதி வீதி, கடைவீதி, பெண்ணாடம்சாலை வழியாக ஏகநாதர் கோயிலுக்கு  கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்ந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில்  தினமும் பன்னிரு திருமுறை முற்றோதல் நடைபெறுகிறது. பக்தர்களின் காதுகளுக்கு விருந்தளிக்கும் விதமாக திரைப்பட நாட்டுப்புற கலைஞர் கானா வேல்முருகன்     குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. தொடர்ந்து இன்று மாலை கிருபானந்த வாரியாரின் சிஷ்யை தேச மங்கையற்கரசியின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது.8ஆம் தேதி மாலை புலவர் இரெ.சண்முகவடிவேல் பட்டிமன்றமும்,  9 ந் தேதி மாலை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சியும், 10ஆம் தேதி பட்டிமன்ற நடுவர் சொல்வேந்தர் சுகிசிவம் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

 

நிகழ்ச்சியில் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர்கள்  எம். அகர்சந்த், எம்.சுரேஷ்சந்ந், எம்.ரமேஷ்சந்த், திட்டக்குடி ஆறுமுகம் கல்வி குழும தலைவர் கே. ராஜபிரதாபன், , வழக்கறிஞர் மெய்கண்டநாதன்,ஸ்ரீமுஷ்ணம் பூமாலை சண்முகம், சபாநாதன், உட்பட பலர் கலந்துகொண்டனர். வரும் 7ந் தேதி காலை 8.00 மணிக்கு ஏகநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகிறது மாலை 5 . 00       மணிக்கு மேல் முதற்கால யாக பூஜையும், வெள்ளிக்கிழமை காலை  8.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும், 9 ந் தேதி சனிக்கிழமை காலையில் 4 ம்கால பூஜையும் மாலையில் 5 ம் காலபூஜையும் 10 ந்தேதி  காலை 6.00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜையும், 9.25 மணிக்கு கடம்புறப்பாடாகி  காலை 10.30 மணிக்கு மேல் தருமபுர ஆதீனம் 26 ம பட்டம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக பரமானந்த  பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், தருமபுரம் இளைய சந்நிதானம் மாசிலாமணி, தேசிக ஞானசம்பந்த சாமிகள்,திருப்பானந்தாள் காசிமடம் காசிவாசி எஜமான் சுவாமிகள், இளவரசு திருஞானசம்பந்த சுவாமிகள், குமாரதேவர் மடம் 24 வது குருமகாசந்நிதானம் இரத்தின வேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் விருத்தாசலம் நகரின் முக்கிய பிரமுகர்கள், ஆன்மீகபெரியோர்கள், வணிக பெருங்குடியினர் பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.

சஞ்சீவி வெங்கடேசன் -9843797700

Comment here