மாவட்டம்

விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் 43 வது ஆண்டு திருவிழா.

Rate this post
விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலயத்தின் 43 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய 43வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது முன்னதாக சிறப்பு திருபலி நடைபெற்றது இதனை தொடர்ந்து பாத்திமா அன்னையின் கொடியை ஊர்வலமாக மேலதாளத்துடன் கொண்டுவந்து கொடிமரத்தை புனித நீரால் தூய்மை படுத்தி தூபங்கள் காட்டப்பட்டு பங்கு தந்தைகளால் கொடிபாட்டு இசைக்கபட்டு மேளதாளங்களுடனும் வெடிகள் வானில் வெடித்து சிதற  கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது அது போது ஏராளமான கிருஸ்த்துவர் அதனை தரிசித்து தூய பாத்திமா அன்னையின் அருளை பெற்றனர் மேலும் தொடர்ந்து 8நாட்கள்  திருவிழா நடைபெற்று 9ஆம் நாள் 13ஆம் தேதி ஞாயிறு அன்று திருத்தேர் பவனி நடைபெறவுள்ளது இந்த திருவிழாவினை பங்கு தந்தைகள் ஆரோக்கியராஜ், புதுவை பங்கு தந்தைஅருமை செல்வம், கடலூர்தொழில் அதிபர் ரொசாரியோ, மிக்கேல்புரம் பங்கு தந்தை மகிமை மற்றும் நமரியா, தூய அல்போன்சா, தூய சூசையப்பர் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தி கொடியேற்றிவைத்து சிறப்பித்தனர்.

Comment here