உலகம்

வில்லியம் ஹண்டர்

இறந்த ஒருவரின் உடலைப் பதப்படுத்தி பாதுகாப்பது எகிப்திய நாகரிகம் தொடங்கியே… நடைமுறையில் இருந்தாலும் மேலே சொன்ன வரலாற்றில் வரும் வில்லியம் ஹண்டர் என்னும் மருத்துவர்தான் அதனை அறிவியல் கலையாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு, உலகப் போர் சமயங்களில் இதே பிணச் சீரமைப்பு போர் முனையிலிருந்து உடலை உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க உதவியது. அதன் பின்னர், பல முக்கியத் தலைவர்களின் உடல்களைப் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்க இதே முறையைப் பின்பற்றினார்கள். இன்றும் ரஷ்ய அருங்காட்சியகத்தில் பிணச் சீரமைப்பு செய்யப்பட்ட லெனின் உடலைக் காணலாம். தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில், ராமானுஜரின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது அந்தக்கால பிணச் சீரமைப்பு முறைக்கு நல்ல உதாரணம்.

Comment here