கோர்ட்

விவாகரத்துக்கு முகாந்திரம் ஆக்கக்கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுப்பு

சுப்ரீம் கோர்ட்டில் அனுஜா கபூர் என்ற பெண் வக்கீல் தாக்கல் செய்த மனுவில், மனைவியுடன் வலுக்கட்டாய தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வதை குற்றமாக கருதி வழக்கு பதிவு செய்யவும், அதை விவாகரத்துக்கு ஒரு காரணமாக ஆக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். திருமண பாலியல்பலாத்காரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் வழிமுறைகளை மத்திய அரசு வகுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அவருடைய தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புஎடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், ‘‘இந்த மனுவில் முகாந்திரம் இல்லை. இதை விசாரிக்க விரும்பவில்லை’’ என்று நீதிபதிகள் கூறினர். டெல்லி ஐகோர்ட்டை அணுகுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

Comment here