அரசியல்இந்தியாஇல்லறம்கோர்ட்தமிழகம்பொது

விவாகரத்து பெற 6 மாதம் காத்திருக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம்

கணவன், மனைவி இருவரும் ஒன்றுபட்டு விவாகரத்து பெற வேண்டும் எனில் 6 மாதம் வரை காத்திருக்க வேண்டாம் என்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவருக்கும் அவரது கணவர் அனுபம் மாத்தூருக்கும் இடையே விவாகரத்து வழக்கு ஆனந்த் தலைமை நீதித்துறை நடுவர் முன்பாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தனக்கும் தன் கணவருக்கும் இடையே சுமூகமாக பிரிவது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளபோதே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே சுமூக பிரிவு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருவரும் இணைந்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரிடமும் நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். அவர்கள் இருவரும் நண்பர்களாக பிரிவது என்று நல்ல சுயசிந்தனையுடன் முடிவு எடுத்துள்ளதை அறிகிறோம். இந்நிலையில், இந்து திருமணச் சட்டம், பிரிவு 13(பி)-யின் படி அவர்கள் விவாகரத்திற்காக 6 மாதங்கள் காத்திருப்பது தேவையற்றது. எனவே, இந்த காத்திருப்பு காலம் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப்படுகிறது. இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகாங்ஷா பெற்றுக் கொண்டார். இருவர் மீதும் உள்ள துவாரகா நீதிமன்ற வழக்கு மற்றும் ஆனந்த் நீதிமன்ற வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார்.

Comment here